உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

வெளிநாட்டு ஊழியரை

சிங்கப்பூரில் முன்னதாக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (ISA) கீழ் 27 வயதான வெளிநாட்டு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 23) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக உள்துறை அமைச்சகம் (MHA) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

நிலவழி VTL: “ஜனவரி 21 முதல் தினசரி பேருந்து பயணங்கள் பாதியாக குறைக்கப்படும்”

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ISAவின் கீழ் அகமது பைசல் என்ற பங்களாதேஸ் ஊழியர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கைது செய்யப்படுவதற்கு முன்பு வரை, ஃபைசல் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சிங்கப்பூரில் கட்டுமான ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 2018இல் அவர் இந்த தீவீரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார் என்றும் அமைச்சகம் கூறியது.

பயங்கரவாத நோக்கங்களுக்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக S$500,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

TravelUpdate: VTL திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் கடுமை – மீறினால் நடவடிக்கை