சிங்கப்பூரில் 100வது ஆண்டை நிறைவு செய்யும் உணவகம் – வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு இலவச பிரியாணி!

Islamic Restaurant 100th anniversary free briyani
Photo: Islamic Restaurant/FB

சிங்கப்பூரின் முதல் பிரியாணி உணவகம், 735 நார்த் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள இஸ்லாமிக் ரெஸ்டாரண்ட் (Islamic Restaurant) ஆகும்.

இந்த உணவகம் தனது 100வது ஆண்டு நிறைவு தினத்தை வரும் ஏப்ரல் மாதம் கொண்டாடவுள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 88 பேர் மீது விசாரணை

இந்த மிகப்பெரிய மைல்கல்லைக் கொண்டாடும் விதமாக, 6 உள்ளூர் மருத்துவமனைகளைச் சேர்ந்த முன்னணி ஊழியர்களுக்கு 2,021 இலவச பிரியாணி பொட்டலங்களை உணவகம் வழங்க உள்ளதாக பெரிட்டா மீடியா கார்ப் தெரிவித்துள்ளது.

வரும் மார்ச் 31 முதல் ஐந்து நாட்களுக்கு அந்த இலவச பிரியாணி விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவகம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச உணவை வழங்கும் என்றும் பெரிட்டா மெடியாகார்ப் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிதாக தொற்று பாதிப்பு!

கூடுதல் விவரங்கள் அதன் நிறைவு தினம் நெருங்கும் நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Photo: Islamic Restaurant

தற்போது இந்த உணவகத்தை 59 வயதான கலில்னூர் ரஹ்மான் அப்துல் வஹாப் நிர்வகித்து வருகிறார், இவர் குடும்பத்தில் மூன்றாம் தலைமுறை உரிமையாளர் ஆவார்.

இஸ்லாமிக் ரெஸ்டாரண்ட், 1921ஆம் ஆண்டில் அப்துல் ரஹிமான் என்பவரால் நிறுவப்பட்டது. அவர் ஒரு பணக்கார அரபு குடும்பத்தின் முதன்மை சமையல்காரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட 24 வயது ஆடவர் கைது