சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் PWS பொது எச்சரிக்கை ஒலி குறித்த அறிவிப்பு..!

Island-wide PWS Sounding
Island-wide PWS Sounding (PHOTO: Reuters)

சிங்கப்பூரில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு PWS பொது எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும் என்று குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

தீவு முழுவதும் இந்த எச்சரிக்கை ஒலி ஒலிக்கும், மேலும் ஒரு நிமிடம் நீடிக்கும் இந்த ஒலியால் பொதுமக்கள்  அச்சப்பட வேண்டாம் என்றும் SCDF தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் அப்டேட் – தூதரகம்..!

SGSecure மொபைல் செயலி பதிவிறக்கம் செய்துள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த எச்சரிக்கை ஒலி ஒலிக்கும், அதைத் தொடர்ந்து குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படும். பின்னர் அதற்குப் பதிலளித்த பிறகு அல்லது 20 வினாடிகளில் அந்த எச்சரிக்கை ஒலி நின்றுவிடும்.

இந்த முக்கியமான ஒலியைக் நீங்கள் கேட்கும்போது, ​​PWS இல் இரண்டு நிமிட செய்திக்கு உடனடியாக உள்ளூர் வானொலி நிலையம் அல்லது தொலைக்காட்சி சேனலை நாடலாம்.

Photo: SCDF

மேலும், go.gov.sg/PWS இணையப்பக்கத்தில் இதன் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால், SCDF இன் 1800 367 7233 என்ற எண்ணை பொதுமக்கள் அழைக்கவும்.

இதையும் படிங்க : இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்தோருக்கு தொடரும் நோய்த்தொற்று பாதிப்புகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

Related posts