இஸ்ரேலில் உள்ள சிங்கப்பூரர்கள் கவனத்துடன் இருக்குமாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

Singapore travel advisory condemns attacks Gaza Israel
Photo: Ministry of Foreign Affairs Singapore

இஸ்ரேலில் உள்ள ஜெருசலேத்தில் நடந்த வெடிக்குண்டு தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் அரசு கடும் கண்டணத்தைப் பதிவுச் செய்துள்ளது.

காட்டில் காணாமல்போன கணவன்-மனைவி;வந்தவழி மறந்து தவித்தவர்களின் தற்போதைய நிலை!

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 23- ஆம் தேதி அன்று ஜெருசலேத்தில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிக்கிறது. இதன் விளைவாக உயிரிழப்புகள் ஏற்பட்டன. பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.

குண்டுவெடிப்புகளால் சிங்கப்பூரர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இஸ்ரேலில் உள்ள சிங்கப்பூரர்கள் கவனத்துடன் செயல்படவும், உள்ளூர் செய்திகளைக் கண்காணிக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கவனிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இஸ்ரேலுக்கு பயணிக்கும் சிங்கப்பூரர்கள் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் இ- பதிவு செய்யவில்லையென்றால், https://eregister.mfa.gov.sg என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் சிக்கிய சிகரெட்டுகள்! – வரி செலுத்தப்படாத பொட்டலங்கள் பறிமுதல்!

தூதரக உதவி தேவைப்படும் இஸ்ரேலில் உள்ள சிங்கப்பூரர்கள் டெல் அவிவில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தையோ (அல்லது) 24 மணி நேரமும் இயங்கும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தையோ தொடர்புக் கொள்ளலாம்.

அதன் விவரங்கள் பின்வருமாறு;

டெல் அவிவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் (Singapore Embassy in Tel Aviv),
28 ஹர்பா தெரு (28 HaArba’a Street),
தெற்கு டவர், 19வது தளம் (South Tower, 19th Floor),
டெல் அவிவ்- 6473926, இஸ்ரேல்,
தொலைபேசி எண்: +972 3 7289334,
ஃபேக்ஸ்: +972 3 7289340,
மின்னஞ்சல் முகவரி: singemb_tlv@mfa.sg.

24 மணி நேரமும் செயல்படும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகம்:

தொலைபேசி எண்: +65 6379 8800 / 8855,
மின்னஞ்சல் முகவரி: mfa_duty_officer@mfa.gov.sg.

இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.