சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் பாதுகாப்பு அதிகாரியின் மீது வேண்டுமென்றே தும்மிய வெளிநாட்டவருக்கு சிறை..!

Jail for woman who sneezed on ION Orchard security guard
Jail for woman who sneezed on ION Orchard security guard (PHOTO: Getty Images)

சிங்கப்பூரில் முகக்கவசம் அணியாததால் Ion Orchard மாலுக்குள் நுழைய தடுத்த பாதுகாப்பு அதிகாரியின் மீது, தும்மிய பெண் ஒருவருக்கு 11 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தைவானைச் சேர்ந்த 46 வயதான சன் சூ-யென் என்ற அந்த பெண், நீண்ட கால வருகை அனுமதியில் சிங்கப்பூரில் தங்கியிருந்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து..!

கடந்த ஆண்டு ஜூன் 4ஆம் தேதி, ஜன்னலுக்கு வெளியே பொருட்களை எறிந்த குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி, அதிரடி திட்டம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில், தன் 10 வயது மகனுடன் அவர் Ion Orchard மாலுக்கு சென்றிருந்தார். ஆனால், இருவரும் முகக்கவசம் அணியவில்லை.

அன்றிலிருந்து, ஷாப்பிங் மால்களுக்கு வருகை தரும் அனைத்து நபர்களும் COVID-19 பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முகக்கவசம் அணிய வேண்டும்.

மால் பாதுகாப்பு அதிகாரி, முகக்கவசம் அணியுமாறு கூறியபோது, நீண்ட துணியை வைத்து அவர் தன் வாயை முகக்கவசம் போல சுற்றிக் கட்டிக்கொண்டார். அதன் பின்னரும், முகக்கவசம் அணியாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அதிகாரியை அவர் திட்டியதாகக் கூறப்படுகிறது.

துன்புறுத்தல் மற்றும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோக்கில் பிறரிடம் நடந்துகொண்டதாக சன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

துன்புறுத்திய குற்ற செயலுக்காக, S$5,000 வரை அபராதம் அல்லது 6 மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

மேலும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய செயலுக்கு S$2,500 வரை அபராதம் அல்லது 6 மாதம் வரை சிறைத்தண்டனை, இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கடந்த இரண்டு மாதங்களில் ஆறு பேருந்துகள் பறிமுதல் – LTA

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

Related posts