COVID-19: சிங்கப்பூரில் நடப்புக்கு வந்த புதிய பாதுகாப்பு விதிமுறை; மீறுபவர்களுக்கு சிறை மற்றும் அபராதம்..!

COVID-19: Singapore safe distance rule
Jail terms, fines for those who breach COVID-19 safe-distancing rules, stay-home notice

சிங்கப்பூரில் COVID-19 பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் விதிமுறைகளை மீறும் நபர்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் வளாகங்களின் உரிமையாளர்கள் மீது புதிய விதிமுறைகளின் கீழ் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடவடிக்கை வியாழக்கிழமை (மார்ச் 26) இரவு 11.59 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : COVID-19: வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு; மீறினால் வேலை அனுமதி ரத்து – MOM..!

அதே போல் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறுபவர்களும் இதேபோன்ற அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வரிசைகளில் நிற்கும்போதும் 1 மீட்டர் இடைவெளியைப் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது சில்லறை விற்பனை கடைகள் அல்லது பல்பொருள் அங்காடிகள் போன்ற பொது இடங்களில், தனிநபர்கள் வரிசையில் 1 மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை பின்பற்றாத வணிக உரிமையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள், ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம், அல்லது S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அதே போல் பாதுகாப்பு இடைவெளி விதிகளை மீறுபவர்கள், ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம், அல்லது S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று MOH கூறியுள்ளது.

மேலும் இன்று முதல் வேலையிடங்களையும் பள்ளிகளையும் தவிர்த்து, பத்து பேருக்கு மேல் வெளியில் ஒன்றுகூடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அனைத்து மதுபானக் கூடங்களும் பொழுதுபோக்குக் கூடங்களும் மூடப்பட்டுள்ளன என்பது கூடுதல் தகவல்.

இதையும் படிங்க : இந்தியா முடக்கம்: சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்ப முடியாமல் தவிப்போர் கவனத்திற்கு – இந்திய தூதரகம் (HCI)..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #WorkPass #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil