ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள வீட்டில் தீ விபத்து – இருவர் மருத்துவமனையில் அனுமதி

Jalan Bukit Merah fire
(Photo: SCDF)

இன்று காலை 6.50 மணியளவில், பிளாக் 105 ஜாலான் புக்கிட் மேராவில் (Jalan Bukit Merah) 7வது மாடி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய இரண்டு பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிதாக தொற்று பாதிப்பு!

தீ விபத்து குறித்து இன்று காலை 7 மணி அளவில் SCDF படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. SCDF வீரர்கள் தீயை அணைக்கும் கருவியைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கத்துக்கு வீடுகளில் வசிக்கும் சுமார் 20 குடியிருப்பாளர்கள் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

தீக்கான காரணம் குறித்த முதற்கட்ட விசாரணையில், நடமாட்ட சாதனத்திலிருந்து (PMD) தீ ஏற்பட்டிருக்கலாம் என்றும் SCDF குறிப்பிட்டுள்ளது.

ரயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட 24 வயது ஆடவர் கைது