ஜப்பான் சுமார் ஆயிரம் 7-Eleven ஸ்டோர்களை மூட உள்ளது..!!

Japan to close 1,000 7-Eleven stores due to structural reforms

ஜப்பான் சுமார் ஆயிரம் 7-Eleven ஸ்டார்களை கட்டமைப்பு சீர்திருத்தம் காரணமாக மூட உள்ளது

குழு அளவிலான மறுசீரமைப்பு பணி காரணமாக, ஜப்பான் நாட்டில் 7- Eleven ஸ்டோர்களை வைத்திருக்கும் Parent நிறுவனமான Seven & i ஹோல்டிங்ஸ் கோ சுமார் 1,000 கடைகளை மூடும் அல்லது இடமாற்றம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளூம்பெர்க்கின் (Bloomberg) தகவலின் படி, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை முக்கியமாக லாபமற்ற 7-லெவன் கன்வீனியன்ஸ் ஸ்டோர்களை பாதிப்பதாக தெரிவித்துள்ளது.

Parent நிறுவனம் கூடுதலாக ஐந்து Seibu மற்றும் Sogo டிபார்ட்மென்ட் ஸ்டோர்களை மூடவும், மேலும் 33 Ito-Yokado கடைகளை மூடுவதையும் பரிசீலித்து வருகிறது.

Seibu, Sogo மற்றும் Ito-Yokado ஸ்டோர்களை மூடுவதற்கு இவை முக்கியமாக பொருந்தும் என்றாலும் சுமார் 3,000 பணிகள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பிப்ரவரி 2019 நிலவரப்படி 7- Eleven 144,628 ஊழியர்கள் பணியில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.