சிங்கப்பூரில் புதிதாக COVID-19 தொற்று பாதித்தவர்கள் சென்று வந்த இடங்கள் வெளியீடு..!

JEM, Pioneer Mall added to list of places visited by infectious cases
JEM, Pioneer Mall added to list of places visited by infectious cases (Photo: JEM)

சிங்கப்பூரில் COVID-19 தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த இடங்களில் மேலும் 2 இடங்களின் பெயர்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அந்த இடங்கள், ஷாப்பிங் மால் JEM -ல் உள்ள FairPrice Xtra மற்றும் Pioneer மால் ஆகியவை ஆகும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்திய நாட்டவர் மரணம் – சுகாதார அமைச்சகம்..!

கடந்த ஜூன் 8 ஆம் தேதி அன்று பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை JEM ஷாப்பிங் மாலின் FairPrice Xtra கடைக்கு தொற்று பாதித்தவர்கள் சென்றுவந்துள்ளனர்.

கடந்த ஜூன் 8 ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் 10.15 வரை, தொற்று பாதித்தவர்கள் Pioneer Mall சென்று வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில், மேலே குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 422 புதிய COVID-19 சம்பவங்கள் பதிவு – சமூக அளவில் 5 பேர் பாதிப்பு..!