வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களிடம் வேலைவாய்ப்புக்கான போட்டி பிளவுபடுத்தும் பிரச்சினை ஆகலாம் – அதிபர் ஹலிமா..!

திடீரென "உங்களுக்கு வேலை இல்லை" என்றதும் ஊழியர்கள் அழுது புலம்பியதாவும், என்ன செய்ய போகிறோம் என்று
(Photo: Reuters)

வேலைவாய்ப்புகளில் சிங்கப்பூரர்களுடன், வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் போட்டியிடுவதாக எழும் பிரச்சனை வேறுபாட்டை உண்டாக்கும் பிரச்சினையாக மாறும், இது தீர்க்கப்படும் என்றும் அதிபர் ஹலிமா யாக்கோப் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்ற பின்னர், 14வது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் தொடக்கத்தில் அதிபர் ஹலிமா உரையாற்றினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து அடுத்த மாதம் முதல் தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

சிங்கப்பூரில் பிளவுபடுத்தும் பிரச்சனையாக, வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களிடம் வேலைகளுக்கான போட்டி நிலவுதாக உள்ள உணர்வு குறித்து அவர் பேசினார்.

நடுத்தர வயது ஊழியர்களிடம், இது முக்கிய கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது, இந்த கவலைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜூலை 10 தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது வெளிநாட்டினரின் இந்த வேலை போட்டி குறித்த விவகாரம் விவாதப் பொருளாக வெளிப்பட்டது, பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கட்சி அரசியல் ஒளிபரப்பில் இதைக் வெளிப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு துறையிலும் உள்ள ஊழியர்களின் திறன்களை மேலும் வலுப்படுத்த முதலாளிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்றும், மேலும் நிறுவனங்கள் சிங்கப்பூரர்களை நியமிக்கும்போது அல்லது நீக்கம் செய்யும்போது நியாயமாக நடத்துவதை உறுதி செய்வதாகவும் அதிபர் ஹலிமா தனது உரையில் கூறினார்.

மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும், சிங்கப்பூரர்களின் நலன்கள் எப்போதும் மிக முக்கியமானவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சுதந்தரம் பெற்ற நாள் முதல் சிங்கப்பூர் தனித்துவமான கலாசாரத்தையும் அடையாளத்தையும் உருவாக்கி வந்துள்ளது. இங்கு இளைய தலைமுறையினர், உணர்வுபூர்வமான விவகாரங்கள் பற்றி கூடுதல் வெளிப்படையாகப் பேச விரும்புகின்றனர் என்பதையும் குறிப்பிட்டார்.

ஆனால் அது அடுத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இருக்க வேண்டும் என்றும் அதிபர் ஹலிமா கூறினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg