சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக தமிழகத்தில் நடக்கும் மோசடி – “எல்லாமே பெர்பெக்ட்’ஆ இருந்துச்சி” – ஏமாந்தவர் கண்ணீர்

15 companies temporarily barred from hiring foreign workers during heightened safety period

சிங்கப்பூரில் பக்காவான வேலை இருக்கு என ஆசை வார்த்தை கூறி கிட்டத்தட்ட 1 லட்ச ரூபாய் சுருட்டிக்கொண்டு சென்ற நபர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் துலுக்கநத்தம் பகுதியை சேர்ந்த 35 வயதான சாதிக் பாஷா, வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்துள்ளார்.

“சிங்கப்பூரின் அரசியல் தவறாகப் போனால் நிர்வாகம், மக்கள் வாழ்வும் தவறாக போய்விடும்” – பிரதமர் லீ

ஆகையால், இணையதளத்தில் வேலைக்காக அவரின் விவரங்களை பதிவு செய்து இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அடையாளம் தெரியாத நபர் “உங்களுக்கு சிங்கப்பூரில் வேலை இருக்கு” என தொடர்பு கொண்டு ஆன்லைன் மூலம் நேர்காணலையும் நடத்தியுள்ளார்.

வழக்கம் போல அந்த கட்டணம் இந்த கட்டணம் என்று 99,980 ரூபாயை செலுத்த வேண்டும் என மர்ம ஆசாமி கூற, சாதிக் எதையும் சரிபார்க்காமல் உண்மை என நம்பி பணத்தை செலுத்தியுள்ளார்.

பின்னர் என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும்… பணத்தை சுருட்டிக்கொண்டு வேலை வாங்கித்தராமல் மர்ம ஆசாமி எஸ்கேப் ஆனார்.

இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது, விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொதுப் போக்குவரத்தில் ஆபத்தில் இருந்த பயணிகளுக்கு உதவிய எட்டு பயணிகளுக்கு விருது!