ஒரே இரவில் கோடிஸ்வரனான ஊழியர் – “என் நாட்டுக்கு செல்லாமல் தொடர்ந்து சிங்கப்பூரிலேயே வேலைசெய்வேன்” என ஊழியர் பெருமிதம்

johor-malaysia-toto-work-singapore

சிங்கப்பூர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரனாக மாறியுள்ளார்.

அதிஷ்ட குழுக்களில் அவருக்கு RM32 மில்லியன் அதாவது S$9,830,000 பரிசு தொகை விழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கால அவகாசம்… மீறினால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தான் பாதிப்பு

இந்நிலையில், கோடிஸ்வரன் ஆனாலும் ஜோகூரில் வசிக்கும் மலேசியரான அவர் சிங்கப்பூரில் தொடர்ந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

44 வயதான அவர், STM லாட்டரி Sdn Bhd இலிருந்து இந்த அதிஷ்ட வெற்றியை பெற்றுள்ளார்.

அவர் இது குறித்து கூறுகையில், எதிர்பார்ப்புகள் குறைவாக இருக்கும்போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்று நம்புவதாக சொன்னார்.

அவர் ஓய்வு நேரங்களில் டோட்டோ 4டி ஜாக்பாட் மற்றும் லக்கி டோட்டோ மார்க் சிக்ஸ் (6/58) ஜாக்பாட் பரிசு ஆட்டங்களில் ஈடுபடுவேன் என கூறியுள்ளார்.

இந்த ஜாக்பாட் பரிசு கிடைக்கும் என நான் நினைக்கவே இல்லை என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

ஒரே இரவில் நான் கோடீஸ்வரனாக ஆனாலும், நான் பணிபுரியும் சிங்கப்பூரில் உள்ள வர்த்தக நிறுவனத்தில் மேற்பார்வையாளராக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் அந்த ஊழியர் தெரிவித்தார்.

தன் இரு மகள்களையே பல ஆண்டுகளாக நாசம் செய்து வந்த கொடூர தந்தை: 428 ஆண்டுகள் சிறை, 240 கசையடி விதித்து அதிரடி காட்டிய நீதிமன்றம்

Verified by MonsterInsights