ஜூரோங் லேக் வட்டாரத்தில் 2026 ஆம் ஆண்டுக்குள் புதிய சுற்றுலாத்தலம்…

Image Credits : Straits Times

ஜூரோங் லேக் வட்டாரத்தில் 2026ஆம் ஆண்டுக்குள் புதிய ஒருங்கிணைந்த சுற்றுலாத்தலத் திட்டம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் உடன் கேளிக்கை இடங்கள், உணவகங்கள், கடைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள சுற்றுலாத்தலத்தில் ஆர்வம் தெரிவிக்க சிங்கப்பூர் சுற்றுலாக் கழகம் குத்தகையாளர்களை அழைப்புவிடுக்க இருக்கிறது.

சைனீஸ் கார்டன் எம்ஆர்டி நிலையத்திற்குப் பக்கத்தில் இந்தத் தலம் அமைக்கப்படும் எனவும், ‘ஜூரோங் லேக் கார்டன்ஸ் ஈஸ்ட்’ வட்டாரத்தில் உருவாகவுள்ள புதிய அறிவியல் மையம் இதற்குப் பக்கவாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

தனித்தன்மை வாய்ந்த நீர்முகப்பையும் சுற்றுப்புறத்தையும் கொண்டுள்ள இந்த இடம் 2026ஆம் ஆண்டுமுதல் முக்கிய சுற்றுலாத்தலமாகத் திகழும் என்று வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் சீ ஹோங் டாட் சிங்கப்பூர் சுற்றுலாக் கழகத்தின் வருடாந்திர சுற்றுலாத்துறை மாநாட்டின்போது தெரிவித்தார். சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணத்தை மேம்படுத்தும் சுற்றுலாக் கழகத்தின் உத்தியுடன் இந்தப் புதிய திட்டம் ஒத்துப்போவதாக அவர் கூறினார்.

மேலும், குத்தகையாளர்களுக்கான அழைப்பு நவம்பர் முற்பகுதியில் முடிவடையும் என்று அவர் கூறினார்.

360 ஹெக்டர் பரப்பளவு கொண்ட ஜூரோங் லேக் வட்டாரம் சிங்கப்பூரின் இரண்டாவது மத்திய வர்த்தக வட்டாரமாக மேம்படுத்தப்படவிருக்கிறது. இங்கு அலுவலகங்கள், வீடுகள், தோட்டங்கள் ஆகியவற்றை அமைப்பதற்கான திட்டங்கள் உள்ளன.

Credits : Straits Times