வெளிநாட்டு ஊழியர்களுக்கு நற்செய்தி – ஜுரோங், செங்காங்கில் நவீன தங்கும் விடுதிகள்!

Jurong Sengkang new dormitory NEST
MOM

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளை கட்டி, அதனை நிர்வகிக்க அரசாங்கத்தால் புதிய கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று அமைக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று (அக். 1) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாழும் சூழலை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமைச்சகம் இந்த தங்கும் விடுதிகளை உருவாக்கி, அதனை நிர்வகிக்கும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.

“முதலாலினா இப்டி இருக்கணும்” – வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு இரு தொழில்கள் தொடங்க உதவி செய்த முதலாளி!

NEST சிங்கப்பூர் லிமிடெட் எனப்படும் அந்த புதிய கார்ப்பரேட் நிறுவனம், ஜுரோங்கில் உள்ள துக்காங் இன்னோவேஷன் லேன் மற்றும் செங்காங் வெஸ்ட் ஆகிய இரண்டு இடங்களில் கட்டப்படும் தங்கும் விடுதிகளை நிர்வகிக்கும்.

வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 2,400 படுக்கைகளுடன் செயல்படும் என எதிர்பார்க்கப்படும் துக்காங் தங்கும் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

மேலும், செங்காங் வெஸ்ட் தங்கும் விடுதி 2028ஆம் ஆண்டிற்குள் 7,200 படுக்கைகளுடன் தயாராக இருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இனி தங்கும் விடுதிகளில் அதிக விசாலமான அறைகள் இருக்கும், என்-சூட் கழிப்பறைகள், மேம்படுத்தப்பட்ட காற்றோட்டம் மற்றும் நவீனமான மற்றும் தனிமையான சமூக வசதிகள் இருக்கும் என்று MOM அதன் செய்திக்குறிப்பில் கூறியது.

போலியான பண நோட்டுகளை நண்பர் உதவியுடன் தயாரித்த ஆடவருக்கு 5 ஆண்டு சிறை