கல்லாங் ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் – போலீஸ் விசாரணை

கல்லாங் ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் - போலீஸ் விசாரணை
Stomp

கல்லாங் ஆற்றில் இருந்து 73 வயதுமிக்க முதியவர் ஒருவர் இறந்த சடலமாக மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) நீர்மூழ்கிக் குழுவினரின் தேடுதல் வேட்டைக்கு பிறகு அவர் நீரில் இருந்து வெளியே மீட்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

நவ.19 அன்று மதியம் 1.05 மணியளவில் 38A பெண்டிமீர் சாலைக்கு அருகிலுள்ள கல்லாங் ஆற்றில் மீட்பு உதவி வேண்டி அழைப்பு வந்ததாக SCDF கூறியது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 7 பேரிடம் போலீசார் விசாரணை

பின்னர், மீட்பு படையினர் அந்த உடலை மீட்டெடுத்து, அவர் இறந்ததை சம்பவ இடத்திலேயே உறுதி செய்தனர்.

அன்று காலை 11.45 மணியளவில் நீரில் மூழ்கியதாக தங்களுக்கு சந்தேகத்திற்கிடமான அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணைகள் இதில் சதிச்செயல் ஏதும் சந்தேகிக்கவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் விண்ணைத்தொடும் வாடகை – இதுவரை இல்லாத அளவுக்கு வாடகை அதிகரிப்பு