வூஹான் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சிங்கப்பூர் அரசின் புதிய நடவடிக்கைகள்..!

Key measures taken by Singapore Government to fight spread of Wuhan virus: சிங்கப்பூரில் வூஹான் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான கூடுதல் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தற்போது நான்கு உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இந்த வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வூஹான் நகரில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஆகும்.

இதையும் படிங்க : “வூஹான் வைரஸ்” சிங்கப்பூரின் பொருளாதாரத்தை பாதிக்குமா..? அமைச்சர் சான் சுன் சிங் விளக்கம்..!

சுகாதார துறை அமைச்சர் கன் கிம் யோங் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நான்காம் தலைமுறை அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டு இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் பலவற்றை அறிவித்தனர், அவைகள்:

சிங்கப்பூரில் இருந்து வெளியே செல்லும் பயணிகளுக்கு:
  • சிங்கப்பூரிலிருந்து சீனாவுக்குச் செல்லும் அனைத்து தேவையற்ற பயணத்தைத் தவிர்த்துவிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • மேலும், வைரஸின் மையமான வூஹான் நகர் அமைந்துள்ள ஹூபே (Hubei) மாகாணத்திற்கு பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற முந்தைய ஆலோசனையில் இது சேர்க்கிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வூஹான் வைரஸ் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபர்…!

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு:
  • சிங்கப்பூருக்கு வரும் அனைத்து விமான பயணிகளுக்கும் உடல் வெப்பநிலைப் பரிசோதனை செய்யப்படும்.
  • இதற்கு முன்னர், சீனாவிலிருந்து வரும் பயணிகளிடம் மட்டுமே உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • கூடுதலாக, நிலம் மற்றும் கடல் வழியாக சிங்கப்பூர் வருபவர்களுக்கும் சோதனைச் சாவடிகளில் வெப்பநிலைப் பரிசோதனை தொடரும்.
  • சீனாவின் இருந்து உள்வரும் விமானங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும், இந்த விமானங்களில் இருந்து பயணிகள் இறங்கும்போது சுகாதார குழுக்கள் அருகிலேயே நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
  • ஹூபே மாகாணத்தில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மீது குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் சிறப்பு கவனம் செலுத்தும்.
  • மேலும், விமானத்தையும் விமானநிலையத்தையும் இணைக்கும் ஏரோபிரிட்ஜ் பாலத்தில் சீனாவிலிருந்து வரும் பயணிகள் கூடுதலாக கண்காணிக்கப்படுவார்கள்.