Work pass புதுப்பிப்பு, வேலைக்கு லஞ்சம் – 56 வெளிநாட்டு ஊழியர்களிடம் S$396,000 வசூல் – கடனில் வந்த ஊழியர்களின் மீளா துயரம்

Photo: Chye Joo Construction Pte Ltd

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்து சிங்கப்பூர் நிறுவன செயல்பாட்டு மேலாளர் ஒருவர் வேலைக்காக வேண்டி சுமார் S$396,440 லஞ்சம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

மனிதவள அமைச்சகம் (MOM) இன்று செப். 29 வெளியிட்ட செய்திக்குறிப்பில் அதனை குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் 2023ம் ஆண்டு 7 நீண்ட வார இறுதி விடுமுறை நாட்கள் – MOM அறிவிப்பு

52 வயதான சிங்கப்பூரர் ஹோ சியாக் ஹாக் டெரிக், வெளிநாட்டு ஊழியர்களிடம் வேலைக்காகவோ அல்லது அவர்களின் work pass புதுப்பித்தலுக்காகவோ கிக்பேக் என்னும் லஞ்சம் வசூலிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தாக MOM கூறியுள்ளது.

ஹோ முன்பு கிளீனிங் மற்றும் கன்சர்வேன்சி நிறுவனமான லியான் செங் காண்ட்ராக்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளராக இருந்தார்.

2020 நவம்பர் மாதத்தில் ஹோ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை MOM விசாரிக்கத் தொடங்கியது.

அவர் சுமார் 56 வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்து 2014 ஆம் ஆண்டு முதல் பல சந்தர்ப்பங்களில் மொத்தமாக S$396,440 லஞ்ச பணம் பெற்றதாக அமைச்சு கண்டறிந்துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு மனிதவளச் சட்டத்தின் (EFMA) கீழ் ஹோ 61 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்று MOM தெரிவித்துள்ளது.

சோவா சூ காங்கில் கடும் விபத்து: 28 வயது ஆடவர் பலி – போதையில் வாகனம் ஓட்டிய 3 பேர் கைது