சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சி சம்பவம்.!

Kid clean up little India

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் கிளைவ் சாலையில் அருகே அமைந்துள்ள ஒரு ஒயின்ஷாப் கடை முன்பு, அங்கு வருபவர்கள் புகைத்துவிட்டு வீசிய சிகரெட் துண்டுகளை, சின்னஞ்சிறுக்குழந்தை பொறுப்புடன் பொருக்கியெடுத்து குப்பை பையில் போடும் காட்சி காண்போர் மனதை கவரும் வண்ணம் உள்ளது.

விடுமுறை தினங்களில், விளையாட்டு, சுற்றுலா, சினிமா, ஆட்டம் பாட்டம் என்று இருப்பவர்கள் மத்தியில் இந்தப் பிஞ்சுக் குழந்தையின் பொறுப்புணர்ந்த இந்த பொதுச் சேவை, அனைவரின் பாராட்டையும் வெகுவாக பெற்று வருகிறது.

சுத்தம் என்பது முதலில் நம்மிடம் இருந்தே தொடங்கவேண்டும், நாம் எடுக்கும் ஒரு சிறு முயற்சி நம் நாட்டின் தூய்மையை வெளிக்காட்டும். மாற்றத்தை நம்மில் இருந்து தொடங்குவோம். நம் பகுதியை சுத்தமாக வைத்திருக்க ஒரு அடி முன்னே எடுத்து வைப்போம்.