சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் பயணிகளின் கவனத்திற்கு – தூதரகம்..!

Kind attention passengers travelling to Tamil Nadu - HCI Singapore
Kind attention passengers travelling to Tamil Nadu - HCI Singapore

வரும் செப்டம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு செல்லும் விமானங்களுக்கான புதிய இணையதள முன்பதிவுகளைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாகச் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டு அரசின் பயண விதிமுறைகள் குறித்து விளக்கம் பெறும்வரை, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்ப இன்னும் 15,000 பேர் காத்திருப்பு..!

தமிழ்நாட்டு அரசின் புதிய விதிமுறைகளின் படி, செப்டம்பர் மாதம் முதல் வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் மட்டுமே மாநிலத்திற்குள் வர அனுமதிக்கப்படும்.

இதில் பயணிகள், தமிழகம் புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்குள்ளாக வைரஸ் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.

தமிழ்நாட்டு அரசுடன் இந்தியத் தூதரகம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப்படியில், வரும் 14ஆம் தேதி வரை விமானங்கள் செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 14ஆம் தேதிக்குப் பிறகு செல்லும் விமானப் பயணிகளுக்கான புதிய விதிமுறைகள் குறித்து தமிழ்நாட்டு அரசிடம் விளக்கம் பெற இந்தியத் தூதரகம் காத்திருக்கிறது.

பயணிகள் அனைவரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் தூதரகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறிய உணவகம் ஒன்றை மூடும்படி உத்தரவு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…