மலேசியாவிலிருந்து பூனைக்குட்டிகளை பேண்ட் பாக்கட்டில் வைத்து கடத்தியவருக்கு சிறை

kittens smuggling in pants
PHOTO: ICA/Facebook

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு பூனைக்குட்டிகளை கடத்தியதாக தாய் மற்றும் மகன் மீது நேற்று முன்தினம் ஜூலை 23ம் தேதி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

72 வயதான லியோங் சோக் பாய் என்ற பெண், 2018ஆம் ஆண்டு பூனைகளை கடத்தியதற்காக 40 நாட்கள் சிறையில் அடைக்கப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

சமூக அளவில் இந்த வாரம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,000ஐ கடந்தது

ICA அதிகாரிகள் சோதனை செய்ததில், கார் ஒன்றில் ஏழு பூனைகள் காணப்பட்டதாக CNA தெரிவித்துள்ளது. லியோங் அதனை தனது செல்லப்பிராணிகள் என்று கூறினாலும் அதற்கு முறையான அனுமதி இல்லை.

அதே போல 2019ஆம் ஆண்டில், அவரது மகன், 47 வயதான ஜஸ்டின் இங் சின் பூன், பூனைக்குட்டிகளை கடத்திச் சென்று பிடிபட்டார்.

துவாஸ் சோதனைச் சாவடியில், அவரது காரில் இருந்து சத்தம் கேட்டது, பின்னர் ICA அதிகாரிகள் சோதனை செய்ததில், நான்கு பூனை குட்டிகள் அவரின் பேண்ட் பாக்கெட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

விலங்குகளுக்கு தேவையற்ற துன்பங்களை ஏற்படுத்தியதாகவும், உரிமம் இல்லாமல் நேரடியாக விலங்குகளை இறக்குமதி செய்ததற்கும் இங் 12 வாரங்கள் சிறையில் அடைக்கப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

அந்த இரண்டு நிகழ்வுகளிலும், லியோ ஹுவா லியாங் என்ற குடும்ப நண்பர் கார் ஓட்டுநராக இருந்துள்ளார். லியோவின் வழக்கு நிலுவையில் உள்ளது.

சிகரெட்டு துண்டை தூக்கி வீசியதால் ஏற்பட்ட தீ – இந்திய ஊழியருக்கு சிறை