நிலவழி VTL: “ஜனவரி 21 முதல் தினசரி பேருந்து பயணங்கள் பாதியாக குறைக்கப்படும்”

LIANHE ZAOBAO

நிலவழி VTL திட்டத்தின்கீழ், சிங்கப்பூர்-மலேசியா இடையே அனுமதிக்கப்படும் பயணிகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 21 முதல் பாதியாகக் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் Omicron கிருமி பரவி வரும் சூழலில், தடுப்பூசி போடப்பட்ட பயண திட்டத்தின்கீழ் (VTL) விமானங்கள் மற்றும் பேருந்துகளுக்கான அனைத்து புதிய டிக்கெட் விற்பனையும் நாளை டிசம்பர் 23 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20 வரை நிறுத்தம் செய்யப்படுகிறது.

TravelUpdate: VTL திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் கடுமை – மீறினால் நடவடிக்கை

இதனை தொடர்ந்து இந்த தற்காலிக பயணிகளின் எண்ணிக்கை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பயணிகளின் அளவு மற்றும் டிக்கெட் விற்பனை குறைப்பு என்பது, இரு வழியிலும் நாள் ஒன்றுக்கு 24 பேருந்து சேவைகளுக்கு சமமானதாக இருக்கும் என்று இன்றைய (டிசம்பர் 22) அறிக்கையில் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் (MTI) கூறியது.

ஏற்கனவே VTL பேருந்து சேவைகளில் டிக்கெட் பெற்ற அனைத்து பயணிகளும் நில வழி VTL திட்டத்தின்கீழ் தொடர்ந்து பயணம் செய்யலாம் என்று MTI தெரிவித்துள்ளது.

இனி இந்த ஊழியர்களுக்கு 7 நாள் PCR சோதனை முறை, N95 முகக்கவசம் மற்றும் பேஸ் ஷீல்டு கட்டாயம்