அட்டவணை முறைப் பரிசோதனையில் தெரியவந்த வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி குழுமம்.!

Google Maps

வெஸ்ட்லைட் ஜுனிபர் வெளிநாட்டு தங்குவிடுதியில் கடந்த ஜுலை 24ம் தேதி, நடந்த வழக்கமான அட்டவணை முறைப் பரிசோதனையில் அங்கு தாெற்று குழுமத்தின் முதல் தொற்று இருந்ததாகவும், இதுவரை 48 தாெற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜுலை 27ம் தேதி வரை, மண்டாயில் இருக்கும் அந்த தங்குவிடுதியில் வெறும் 9 பேருக்கு மட்டும் தொற்று ஏற்பட்டிருந்தது, தாெற்றுக்குழுமத்தில் இருந்த 6 பேர் அங்கு தொற்று ஏற்பட்டிருந்தவர்களுடன் நெருங்கி பழக ஆரம்பித்ததால் தொற்று மேன்மேலும் பரவியதாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்ட, இந்த வழக்கமான அட்டவணைப் பரிசோதனையினால் கண்டறியப்பட்ட தொற்றுடைய மற்றவர்களும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், தாெற்றுள்ளவர்களுடன் நெருங்கி பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தங்குவிடுதியில் உள்ள மற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கிருமி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இனி வாரத்திற்கு ஒருநாள் அவர்களுக்கு கிருமி பரிசோதனை செய்யப்படும் என்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தங்குவிடுதியை நடத்தும் வெஸ்ட்லைட் அகாமடேஷன் நிறுவனம் கூறுகையில், தங்களது விடுதியில் அதிகபட்சமாக 1,900 பேர் வரை தங்கலாம், தற்போது 1,408 பேர் தங்கியுள்ளனர். அதில் சுமார் 500 ஊழியர்கள் தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 380 பேர் சிகிச்சைப் பெற்று விடுதிக்கு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.