சிங்கப்பூரின் 200 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை போற்றும் வகையில் புதிய 20 வெள்ளி பணநோட்டுகள் வெளியீடு !

சிங்கப்பூர் தோற்றுவித்து 200 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை அடுத்து அவற்றை போற்றும் வகையில் புதிய 20 வெள்ளி பணநோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பணநோட்டை அதிபர் ஹலிமா யாக்கோப் அவர்களின் தலைமையில் சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய நோட்டின் முன்பகுதியில் சிங்கப்பூரின் முதல் அதிபரான திரு. யூசோஃப் ஈஷாக்கின் புகைப்படம் அமைந்திருக்கும். அதனுடன் தற்போது சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடமாக இயங்கி வரும் முந்தைய உச்ச நீதிமன்றமும் நோட்டின் முன்பக்கம் இருக்கும்.

அதே போல் நோட்டின் மற்றொருபுறத்தில் திரு பி. கோவிந்தசாமி பிள்ளை, திரு முன்சி அப்துல்லா (மலாய் இலக்கியத்தின் தந்தை – பிறப்பால் ஒரு தமிழர்) உள்ளிட்ட 8 முன்னோடிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

புதிய பணநோட்டின் முன் பின் தோற்றம்.

இந்த பணத்தை வடிவமைத்தவர்கள் எங் சியாக் லொய் (Eng Siak Loy) மற்றும் வெங் ஸியான் , (Weng Ziyan) ஆகிய கலைஞர்கள் ஆவார்கள். இந்த தகவலை Monetary Authority of Singapore தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.