சிங்கப்பூரில் பணிநீக்கத்திற்கு ஆளான 7,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் புதிய வேலைகளில் இணைந்தனர்..!

lay off workers joined new jobs
lay off workers joined new jobs

கடந்த 3 மாத நிலவரப்படி, சிங்கப்பூரில் ஆள்குறைப்புக்கு ஆளான சுமார் 7,000க்கும் அதிகமான ஊழியர்கள் தங்களுக்கு புது வேலைகளைத் தேடிக்கொள்ள முடிந்ததாக செய்தி குறிப்பிட்டுள்ளது.

அதாவது அவர்கள் பாதுகாப்பு, சுகாதாரப் பராமரிப்பு, தளவாடம் போன்ற துறைகளில் பணியமர்த்தப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் குணமடைந்தோர் எண்ணிக்கை சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை தாண்டியது..!

ஊழியர்களுக்கு உதவ, பல்வேறு உத்திகள் கையாளப்படுவதாகக் காங்கிரஸின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் (Ng Chee Meng) கூறினார்.

இதில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனங்களோடு இணைந்து பொருத்தமான ஊழியர்களை பணியமர்த்தும் முயற்சியில், தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்த கொரோனா பரவல் மத்தியில், ஊழியர்களுக்கான ஆதரவுத் திட்டங்களை விரிவுபடுத்த போவதாகக் காங்கிரஸ் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது நிறுவனங்கள் அவற்றின் செலவுகளைச் சமாளிக்க தேவையான அவற்றுக்கு சம்பளச் சலுகைகள் வழங்கப்படும். வேலை மறுவடிவமைப்பில் அவை கவனம் செலுத்தவும் ஊக்குவிக்கப்படும். மேலும், அதன் மூலம் ஊழியர்கள் தங்களது வேலைகளைப் பாதுகாத்துக்கொள்வதை உறுதிசெய்ய முடியும் என்றும் திரு. இங் கூறியுள்ளார்.

மேலும் கூடுதலாக வேலை இழந்த தவிக்கும் ஊழியர்களை, பொருத்தமான மாற்றுவேலைகளில் பணியமர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், பெண்களும், வயதான ஊழியர்களும் வேலை இடத்தில் நியாயமான முறையில் நடத்தப்படுவது உறுதிசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கவும் காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாக திரு. இங் கூறியுள்ளார் என்று செய்தி மீடியாகார்ப் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID -19: வழிபாட்டுத் தலங்களில் ஜூன் 2 முதல் தனிப்பட்டு வழிபாடுகள் நடத்த அனுமதி..!