Lazada மலிவு விற்பனை: S$5 மட்டுமே செலவிட்டு S$179,000 காரை தட்டி சென்ற வாடிக்கையாளர்!

Lazada 12.12 Sale Volvo S60 win
Lazada x Mediacorp 12.12 Sale (PHOTO: Lazada)

சமீபத்தில் Lazada வாடிக்கையாளர் ஒருவர், 12.12 மிகப்பெரிய மலிவு விற்பனையின் போது, புதிய Volvo S60 ஸ்போர்ட்ஸ் காரை பரிசாகக் வென்றுள்ளார்.

Lazada வெளியிட்ட தகவல்களின்படி, கார் வெற்றியாளர் அதற்காக S$5 மட்டுமே செலவிட்டுள்ளார். அந்த Volvo S60-க்கான விலை சுமார் S$179,000 முதல் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் 3ஆம் கட்டம்: COVID-19 சோதனைக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு..!

கடந்த டிசம்பர் 12 அன்று மதியம் 12 மணிக்கு வாங்கிய 2,123 பேரில் அவர் 12வது இடத்தை பிடித்து இந்த பரிசை தட்டிச்சென்றார்.

Mediacorp உடனான கூட்டு ஒத்துழைப்புடன் இந்த ஆண்டு நடைபெற்ற இறுதி விற்பனை, கடந்த ஆண்டு 12.12 லாசாடாவின் விற்பனை சாதனையை முறியடித்தது.

அதாவது இதில் சுமார் 73,000க்கும் மேற்பட்ட பொருட்கள் வெறும் 12 வினாடிகளில் விற்று தீர்ந்தன, மேலும், Seiko SBGJ239 கடிகாரம் சுமார் S$7,753 மதிப்புக்கு விற்பனை ஆனது.

இதில் 1,212வது இடத்தை பிடித்த வாடிக்கையாளருக்கு 1 வருடம் RedMart மளிகைப் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்.

அனைவரும் வீட்டில் இருக்கும் காரணத்தால் இந்த ஆண்டு, சமையலறை மற்றும் உணவு சார்ந்த பொருட்களின் விற்பனை 160 சதவீதம் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு இல்லாமல் 6வது மாடி ஜன்னல் விளிம்பில் அமர்ந்து AC பொருந்தும் ஊழியர்…மனிதவள அமைச்சகம் விசாரணை!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…