சிங்கப்பூரில் மரமேடை மிதப்பில் இருந்து தண்ணீருக்குள் பாயும் பெரிய முதலை – வைரல் காணொளி!

Lim Chu Kang Massive crocodile
(Photo: Mothership)

சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் பஹ்ரு இடையே கெலாங் மரமேடை மிதப்பில் ஒரு பெரிய முதலை கேமராவில் பிடிப்பட்டுள்ளது.

அந்த முதலை சுமார் 3மீ அல்லது அதற்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மினிபஸ், மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – சம்பவ இடத்தில் ஒருவர் மரணம்!

அது மிதக்கும் பலகையில் இருந்து தண்ணீருக்குள் பாயும்காட்சி வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதன் காணொளி உங்கள் பார்வைக்கு இங்கு பதிவு செய்யப்படுகிறது.

சிங்கப்பூரில் ஆபத்தான முதலைகள் காணப்படும் லிம் சூ காங் மரமேடை (Lim Chu Kang jetty) தற்போது பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது, அது 2017 முதல் மூடப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் அத்துமீறி செல்பவர்கள் கைது செய்யப்படுவர். பொதுமக்களை எச்சரிக்க முதலைகள் குறித்து எச்சரிக்கை பலகைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இலவச முகக்கவசத்திலும் மோசடி… 2 பேர் பிடிபட்டனர்!