வருமானம் இன்றி தவித்த “லிட்டில் இந்தியா”…. விடுதி வெளிநாட்டு ஊழியர்கள் வருகை செய்தியால் மகிழ்ச்சி

ROSLAN RAHMAN/AFP - Google Maps

கடந்த ஒன்றரை ஆண்டுகள், லிட்டில் இந்தியாவில் உள்ள கடைக்காரர்கள் வருமானம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட் -19 தொற்றுநோயின் விளைவாக வார இறுதிகளில் அந்த பகுதிக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் லிட்டில் இந்தியாவில் கடைக்காரர்கள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டனர் என்று கூறினால் அது மிகையாகாது.

தொற்றுநோய்க்கு முந்தைய வார இறுதி நாட்களில் 200,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் என இருந்த வருகை, பின்னர் சில ஆயிரங்களுக்கு குறைந்துவிட்டது.

இதனை லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் பாரம்பரிய சங்கத்தின் (LISHA) செயலாளர் திரு ருத்திரபதி பார்த்தசாரதி கூறினார்.

இந்நிலையில், சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான நடமாட்டக் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாக நேற்று (செப். 9) மனிதவள அமைச்சகம் (MOM) அறிவித்தது.

அது வரும் செப்டம்பர் 13 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அது கூறியுள்ளது.

அதன் படி, தடுப்பூசி போட்டுக்கொண்ட 500 ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் ஆறு மணி நேரம் லிட்டில் இந்தியா செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்வு – MOM சோதனை நடவடிக்கை

லிஷா (LISHA), மனிதவள அமைச்சகத்துடன் (MOM) இணைந்து பைலட் திட்டத்தை உண்மை நடைமுறையாக மாற்ற திட்டமிட்டு வருவதாக திரு ருத்திரபதி, தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.

இந்த பைலட் திட்டத்தில், ஊழியர்கள் தங்குவதற்காக வருகை நேரத்தை ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் நீட்டிக்கும் என்று திரு ருத்திரபதி கூறினார்.

இந்த நடமாட்ட அளவை எவ்வாறு பாதுகாப்பான முறையில் விரிவுபடுத்துவது என்பதை ஒரு மாதத்திற்குப் பிறகு MOM மறுஆய்வு செய்யும் என்றும் கூறியுள்ளது.

“வெளிநாட்டு ஊழியர்கள் செய்யும் பங்களிப்பு, தியாகங்களை ஒப்புக்கொள்வது கூட கிடையாது” – சீ சூன்