சிவனே!சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு வரும் நன்னாள் என்னாள்? – திருடப்பட்ட சிலைகளின் பின்னணி;வியக்க வைக்கும் தமிழ் மன்னன்!

rajaraja chozhan king

கடத்தப்பட்ட கோவில் சிற்பங்கள் சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பும் என்று தமிழ்நாட்டின் திருப்பெரும்புதூர் வட்டாரத்தில் உள்ள சிவன்கூடல் என்ற கிராம மக்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.இக்கிராமத்தின் நெல் வயல்களுக்கு மத்தியில் ஒரு சிவன் கோவில் உள்ளது.

இந்தக் கோவில் தமிழ்நாட்டின் பெருமையான பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனால் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்த சிவக்கொழுந்தீஸ்வரன் கோவிலில் இருந்த சோமாஸ்கந்தர் வெண்கலச் சிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு களவு போனது.

சிவன்,பார்வதி மற்றும் அவர்களின் புதல்வன் முருகன் மூவரும் வீற்றிருக்கும் மூன்று வெண்கலச் சிலைகளே கடத்தப்பட்டவையாகும்.இந்த சிலைகள் தென்கிழக்காசியவையே ஆட்சி செய்த சோழப் பரம்பரையின் சிற்ப கலைகளைப் பிரதிபலிக்கின்றன.

2015-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையின் உதவியுடன் சிலைகள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.அவை சிங்கப்பூரின் ஆசிய நாகரிக அருங்காட்சியகத்தில் உள்ளன.சிங்கப்பூரில் உள்ள தொல்லியல் ஆய்வாளர் விஜயகுமார் 1916-இல் வெளியான புத்தகம் ஒன்றில் இருந்த புகைப்படத்தை ஒப்பிட்டுப் பார்த்து கண்டுபிடித்துள்ளார்.

சென்ற ஆண்டிலிருந்து சிலைகளைத் திரும்ப தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு இந்தியாவும் சிங்கப்பூரும் செயல்பட்டு வருகிறது.சிவன் அவரது குடும்பத்தோடு தமிழகத்திற்கு திரும்பும் நன்னாளை நோக்கி கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.