லாரி டிரைவரின் அலட்சியத்தால் இருவர் பலி!

(PHOTO: Facebook / Complaint Singapore and ItsRainingRaincoats)

2021ஆம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதியன்று ஏற்பட்ட லாரி விபத்தினால் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கான விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்றது.

லாரி டிரைவரின் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலுமே இந்த விபத்து நடந்துள்ளதாக விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கோவிட்-19 காரணமாக மேலும் 9 பேர் உயிரிழப்பு

இந்த விபத்து ஏற்படுவதற்கு காரணமான 36 வயதுடைய அந்த லாரி டிரைவரை நீதிமன்றத்தில் மூத்த புலன் விசாரனை அதிகாரி அஸிஸ் தஹார் விசாரித்துள்ளார்.

அப்போது டிரைவர் ஜாலான் பஹாரில் தமது உயர் அதிகாரியை ஏற்றிச் செல்வதற்காக நகரத்தின் விரைவுப் பாதையில் வேகமாகச் சென்றதாக தெரியவந்துள்ளது.

ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரி சாலையில் சென்றபோது, அந்த லாரி டிரைவரின் கவனக்குறைவால் சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்பக்கத்தின் மீது மோதியது.

இதனால் ஊழியர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தில் இருந்த 17 ஊழியர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். இவ்வூழியர்களில் மிகவும் அதிக காயங்கள் ஏற்பட்ட இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லாரிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி, இந்தியாவைச் சேர்ந்த சுகுணன் சுதீஷ்மன் (வயது 28) மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த டோஃபைசல் ஹுசைன் (வயது 33) ஆகிய இருவரும் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும் அவர்கள் இருவரின் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூரில் மேலும் 3,190 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!