கட்டுமானப் பகுதியில் லாரி மோதிய விபத்தில் இந்திய ஊழியர் மரணம்

Pic: Getty Images

பிடோக் “ஆக்டிஃப் எஸ்ஜி ஸ்டேடியம்” இருக்கும் பிடோக் நார்த் ஸ்டீரீட் 2ல் உள்ள கட்டுமானப் பகுதியில் 37 வயதுடைய ஊழியர், சிமெண்ட் லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடந்த செப்டம்பர் 17ம் தேதி மாலை 5.55 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது, அன்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினருக்கு தகவலும் கொடுக்கப்பட்டது.

சிமெண்ட் லாரியில் சிக்கிய 37 வயது ஆடவர் மரணம்

இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஆடவர் இந்தியாவைச் சேர்ந்த ஊழியர் என்று தற்போது செய்தி குறிப்பிட்டுள்ளது.

விபத்து நடந்த சமயம் அவர் கட்டுமானத் தளத்தில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பணியில் ஈடுபட்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மீட்புக்கான சாதனங்களைக் கொண்டு உயிரிழந்த ஆடவரின் உடலை, தற்காப்பு படையினர் மீட்டெடுத்தனர்.

26 வயதுடைய ஆடவரின் கவனக்குறைவினால் இந்த விபத்து நடந்ததாக, காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Lum Chang பில்டிங் கான்ட்ராக்டர்ஸ் என்ற நிறுவனத்தில் அவர் பணி புரிந்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் மனைவியைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை!