குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள்… குழந்தைகள் இருக்கா?? – அப்போ உங்களுக்கு தான் இந்த ComLink ஆதரவு திட்டம்

singaporeans-happiness survey
Photo: gov.sg

குழந்தைகளை உடைய குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், பொது வாடகை குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது (தகுதியுடையவர்களாக இருந்தால்) தானாகவே சமூக இணைப்பு (ComLink) திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவர்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாடகை குடியிருப்புகளுக்குச் சென்றவுடன் அவர்களுக்கு உதவி வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“அம்மாவுக்கு உடம்பு முடியல, மகன் படிப்பு செலவு”… அலுவல வேலையை விட்டு, துப்புரவு வேலை பார்த்து இரு வீடுகள் வாங்கிய ஊழியர்!

இந்த புதிய திட்டத்தை நேற்று வெள்ளிக்கிழமை நடந்த ஃபார்வர்டு எஸ்ஜி பொது நிகழ்ச்சியில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறிவித்தார், அவர் சமூக சேவைகள் ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் உள்ளார்.

ComLink திட்டத்தின்கீழ் பொது வாடகை வீடுகளில் உள்ள சுமார் 11,000 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக திரு லீ கூறினார்.

சிங்கப்பூரில் சுமார் 51,100 குடும்பங்கள் அவ்வாறான பொது வாடகை குடியிருப்புகளில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

50 சதவீத வாகனங்களில் பூஜ்ஜிய புகை வெளியேற்றம்: 2030 டார்கெட் – மாசுபாட்டை குறைக்க சிங்கப்பூர் திட்டம்