“சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுகிறது”- எஸ்பி குழுமம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Electricity tariff increase
Photo: Google Maps

சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கப்படுவதாக எஸ்பி குழுமம் (SP Group) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் வெளியானது ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’- திரையரங்குகளின் பட்டியல்!

சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பாக எஸ்பி குழுமம் இன்று (30/09/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக அதிகரித்து வந்த மின்சாரக் கட்டணம், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மின்சாரக் கட்டணங்கள் குறைவாகவே இருக்கும்.

அக்டோபர் 1- ஆம் தேதி முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தவிர்த்து மின்சாரக் கட்டணம் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது கிலோவாட்டுக்கு சராசரியாக 1.4 சதவீதம் அல்லது 0.42 சதவீதம் குறையும்.

எரிசக்திக்கான செலவினங்கள் குறைந்ததே இதற்கு காரணம். டிசம்பர் 31- ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டில், ஜிஎஸ்டியைத் தவிர்த்து, வீடுகளுக்கான மின் கட்டணம் கிலோவாட்டுக்கு 30.17 முதல் 29.74 காசுகள் வரை குறையும்.

எச்டிபி நான்கு அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் (HDB Four- Room Flats) வசிக்கும் குடும்பங்களுக்கான சராசரி மாத மின் கட்டணம் சிங்கப்பூர் டாலர் 1.55 குறையும்” எனத் தெரிவித்துள்ளது.

‘கோவையில் இருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாமுக்கு விமான சேவை’- ஸ்கூட் நிறுவனம் அறிவிப்பு!

கடந்த காலாண்டில், மின்சாரக் கட்டணங்கள் சராசரியாக 8.1 சதவீதம் அதிகரித்தன. ரஷ்யா- உக்ரைன் போரால் அதிகரித்த உலகளாவிய எரிவாயு மற்றும் எண்ணெய் விலைகளால் மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கான காரணம். எரிசக்தி சந்தை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் எஸ்பி குழுமம் ஒவ்வொரு காலாண்டிலும் மின் கட்டணங்களை மதிப்பாய்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சாரக் கட்டண குறைப்பு அறிவிப்பால் சிங்கப்பூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.