சிங்கப்பூரர்கள் தங்கள் பணியிடங்களுக்கு விரைவாக செல்ல ‘LTMP – 2040’ என்ற புதிய திட்டத்தை LTA அறிவித்துள்ளது.!

தரைவழி போக்குவரத்து ஆணையம் ( LTA) சமீபத்தில் தரைவழி போக்குவரத்து பெருந்திட்டம் (LTMP) 2040 என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த நீண்ட கால பெருந்திட்டம் தரை வழி போக்குவரத்து அமைப்பில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் போக்குவரத்தில் சிறந்த வசதி, சரியான மற்றும் முறையான இணைப்பு, அதனுடன் வேகத்தையும் வரும் வருடங்களில் அதாவது சுமார் 20 வருடத்திற்கு மேலாக வழங்க இருக்கிறது.

இதன் மூலம் சிங்கப்பூரர்கள் MRT அல்லது பேருந்துகளை தேர்வு செய்து தான் விரும்பும் பகுதிக்கு செல்ல அளவில்லா போக்குவரத்து வசதியை பெறலாம். மேலும், இனி வரும் காலங்களில் சிங்கப்பூரர்கள் பயண நேரம் படிப்படியாக குறையும்.

2040 இல் இயக்கத்தில் உள்ள அனைத்து Mobility மற்றும் பொது போக்குவரத்து முறைகளும் கூட்டாக Walk – Cycle – Ride (WCR) செயல் முறையில் மாற்றப்படும்.

2016 ஆம் ஆண்டில் சாதாரணமான பணியிடங்களுக்கு செல்ல 50 நிமிடத்திற்கு மேல் ஆனது, தற்போது 2019 இல் 3 இல் 2 பங்கு பணியிடங்களுக்கு செல்ல 45 நிமிடங்கள் ஆகிறது.

வரும் 2040 ஆம் ஆண்டில் வெறும் 20 நிமிடத்திற்கு அருகில் உள்ள மையப் பகுதிகளுக்கு செல்லலாம், என்று LTA அறிவித்துள்ளது.