“மதுரை, சிங்கப்பூர் இடையேயான கூடுதல் விமான சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், தமிழகத்தின் திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. இதில், மதுரை மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

சிங்கப்பூரின் செல்லக்குட்டிக்கு பிறந்தநாள் வந்துருச்சு! – தாயைத் தழுவும் குறும்புக்கார குட்டிப் பாண்டா!

மதுரை, சிங்கப்பூர் இடையே வாரத்தில் சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில், வரும் நவம்பர் 1- ஆம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் கூடுதல் விமான சேவை வழங்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கூடுதல் விமான சேவையால் இனி வாரத்தில் சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளுடன் வியாழன்கிழமைகளிலும் விமான சேவையை விமான நிறுவனம் வழங்கவுள்ளது. அதேபோல், இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர் மீது குடிமக்கள் மிகுந்த காதல் கொள்ள காரணம் இதுதான்! – சிங்கப்பூர் அரசு வழங்கும் ரொக்கத் தொகையைப் பெற தகுதி வரம்பு என்ன?

விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.