வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு அனுமதி – இந்தியாவிற்கும் வழிவகை செய்யும் திட்டம்

migrant-domestic-workers mental-distress
(Photo: TRT World and Agencies)

தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் இந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்குள் வர அனுமதிக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கடந்த அக்டோபர் 5 அன்று தெரிவித்தார்.

அதில் அக்டோபர் 15ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பணிப்பெண்களுக்கான புதிய நுழைவு விண்ணப்பங்களை மனிதவள அமைச்சகம் ஏற்கத் தொடங்கும் என்று நாடாளுமன்ற கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அப்போது பதிலளித்தார்.

பாசிர் ரிஸில் நடந்த விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

இருப்பினும், பொது சுகாதார காரணங்களுக்காக நுழைவு அனுமதி தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், வீட்டுப் பணிப்பெண்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு சுமார் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம், என்றார்.

இந்நிலையில், அவர்களின் தேவை சிங்கப்பூரில் அதிகரித்துள்ளதால், வாரம் தோறும் நூற்றுக்கணக்கான பணிப்பெண்கள் வரவழைக்கப்பட உள்ளனர்.

இந்திய நாட்டில் இருந்தும் அவர்களை சிங்கப்பூர் அழைத்துவர அந்த சிறப்பு ஏற்பாடு வழிவகை செய்யும்.

சிங்கப்பூர் அதிக ஆபத்துள்ள நாடு என COVID-19 பயண ஆலோசனையை வெளியிட்ட நாடு