கோலாலம்பூர் – சிங்கப்பூர் இடையிலான அதிவேக ரயில் திட்டம் ஒத்திவைப்பு..!

Malaysia and Singapore have agreed to defer the Kuala Lumpur-Singapore High-Speed Rail (HSR) project yet again until the end 2020.
Malaysia and Singapore have agreed to defer the Kuala Lumpur-Singapore High-Speed Rail (HSR) project yet again until the end 2020. (Photo: Mothership)

கோலாலம்பூர்- சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்தை மீண்டும் இந்த ஆண்டு இறுதி வரை ஒத்திவைக்க இருநாடுகளும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 350 கிமீ உள்ள இந்த ரயில் பாதையின் கட்டுமானப் பணிகள் கடந்த 2018 செப்டம்பர் மாதத்தில் இருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிறுத்திவைக்கபட்டுடிருந்த காலக்கெடு இன்றுடன் முடிவைடையும் நிலையில் மலேசியாவின் கோரிக்கை வந்திருப்பதாக சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 518 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

இரு நாடுகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 31) தாமதம் குறித்து உடன்பாடு பற்றி குறிப்பிட்டுள்ளன.

இன்னும் இத்திட்டத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசனை செய்ய அவகாசம் தேவைப்படுவதால், மேலும் சில காலத்துக்கும் இத்திட்டத்தினை நிறுத்திவைக்க மலேசியா கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் கோரிக்கைக் குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், இத்திட்டத்தின் வளப்பம் குறித்து சிங்கப்பூர் ஆர்வம் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் புதிய தொற்று பரவல் குழுமம் அடையாளம்..!