முதலீடு மற்றும் தொழில் தொடங்க சிறந்த நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் 6 வது இடம்!

Malaysia best country to invest in this year

தொழில் தொடங்க அல்லது முதலீடு செய்ய சிறந்த நாடுகள் பட்டியலில் மலேசியா முதலிடத்தைப் பெற்றுள்ளதாக CEOWORLD பத்திரிக்கை கூறியுள்ளது.

மொத்தம் 67 நாடுகள் உள்ள இந்த பட்டியலில், மலேசியா முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் தொடங்குவோருக்கு சிறந்த நாடாக விளங்குவதாக அந்த பத்திரிக்கை தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த தரம் 11 வெவ்வேறான காரணிகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது, அதாவது ஊழல், சுதந்திரம், தொழிலாளர்கள், முதலீட்டாளர் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதி, வரிகள், வாழ்க்கைத்தரம், தடங்கள் அற்ற தொழில்நுட்பம் மற்றும் ரெட் டேப் ஆகியவையை அடிப்படையாகக் கொண்டு பட்டியலிடப்பட்டுள்ளது.

போலாந்து சில்வரையும், அதைத்தொடர்ந்து பிலிப்பைன்ஸ் வெண்கலத்தையும் பெற்றுள்ளது. மேலும், நான்கு மற்றும் ஐந்தாவது இடங்கள் முறையே இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளது.

சிங்கப்பூர் 6 வது இடத்திலும் அதை தொடர்ந்து இந்தியா உள்ளது.

U.K, U.S, சீனா மற்றும் ஜப்பான் முறையே 16, 18, 24 மற்றும் 32 வது இடத்தை பெற்றுள்ளன.