மலேசியாவில் களைகட்டியது தைப்பூசத் திருவிழா… அலகு குத்தியும், காவடி எடுத்தும் பத்துமலை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

Twitter Image

மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயில் உலக புகழ்பெற்றது. மலேசியாவுக்கு செல்லும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும், இங்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வர். குறிப்பாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பத்துமலை முருகன் கோயிலில் தரிசனம் செய்து செல்வார்கள்.

தைப்பூசத் திருவிழாவையொட்டி, ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

இந்த கோயிலில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிப்ரவரி 5- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தைப்பூசத்தை முன்னிட்டு, பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பத்துமலை முருகன் கோயிலுக்கு வந்து, அரோகரா என்ற முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்து தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினர். மலேசியா வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது, சிங்கப்பூரர்களும், சீனர்களும் பால்குடங்கள், காவடிகளை எடுத்து பாதயாத்திரையாக பத்துமலை முருகன் கோயிலுக்கு வந்து வழிபட்டு சென்றனர்.

தைப்பூசத்தையொட்டி, பத்துமலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. பத்துமலை முருகன் கோயிலுக்கு செல்லும் சாலைகள் அனைத்திலும், பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அரசுப் பள்ளிகளின் முதல்வர்களைப் பயிற்சிக்காக சிங்கப்பூருக்கு அனுப்பிய பஞ்சாப் அரசு!

மேலும், பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்கும் அளவுக்கு இருந்தது. தைப்பூசத் தினத்தன்று மட்டும் சுமார் 5,000- க்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்துமலை முருகனை தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மலேசியாவில் தைப்பூசத் திருவிழா களைகட்டியுள்ளது என்ற கூறலாம்.