மலேசியாவில் கோவிட்-19 தடுப்பூசி போட்டவர்களுக்கான தனிமைப்படுத்தப்படும் காலம் குறைப்பு!

(photo: Unsplash)

இனி மலேசியாவிற்கு வரும் பயணிகள் கோவிட்-19 தடுப்பூசி முறையாக போட்டிருந்தால், ஒரு வாரம் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மலேசியா சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.

மேலும் கோவிட்-19 தாெற்றுப் பரவல் ஏற்பட்டவர்களுடன் பழகிய உறவினர்கள், நண்பர்கள் & உடன் வேலைப் பார்ப்பவர்களும் முறையாக கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டிருந்தால், அவர்களும் ஒரு வாரம் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜூரோங் தங்குவிடுதியின் ஆய்விற்கு பின் மனிதவள அமைச்சு அதிரடி நடவடிக்கை!

இதுவரை வெளிநாடுகளிலிருந்து மலேசியாவிற்குள் வருபவர்களின் தனிமைப் படுத்தப்படும் காலம் 2 வாரமாக இருந்து வந்தது. தற்போது அக்கட்டுபாட்டு காலம் 1 வாரமாக குறைக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசியை முறையாக போட்டுக் கொள்பவர்களுக்காக உதவிகரமாக இச்சலுகையை மலேசியா அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதாவது, மலேசியா குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனரால், வெளிநாட்டிலிருந்து மலேசியாவிற்குள் வர அங்கீகரிக்கப்படுபவர்கள் அனைவருக்கும் இச்சலுகை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கோவிட்-19 தடுப்பூசிப் போட்டுக் கொள்ளாதவர்கள் மற்றும் முழுமையாக 2 கோவிட்-19 தடுப்பூசிகளையும் போடாதவர்களுக்கு கிட்டதட்ட 10 நாட்கள் தனிமைப்படுத்தும் காலமாக இருக்கும்.

தடுப்பூசிப் போட்டுக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் திரு கைரி தெரிவித்தார்.

நீண்ட காலமாக கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் மீது, அரசு கடுமையான அணுகுமுறையை கையாளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார் அவர்.

அதாவது கோவிட்-19 தடுப்பூசி போடாதவர்கள் அரசின் பல்வேறு சலுகைகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார் அவர்.

இருப்பினும், இதுவரை மலேசிய அரசு தடுப்பூசி போட்டுக் கொள்வதை கட்டாயமாக்கவில்லை என்பதையும் திரு. கைரி குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 19 வயது மாணவர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து மரணம்