இந்திய வம்சாவளி ஆடவரின் தூக்கு தண்டனை வழக்கு – சிங்கப்பூர் கூறுவதென்ன?

சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் வழக்கு குறித்து, மலேசியத் தலைவர்களின் மேல்முறையீட்டுக் கடிதங்கள் தொடர்பாக மலேசிய அரசருக்கு அதிபர் ஹலிமா யாக்கோப் பதில் அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (டிச. 3) தெரிவித்துள்ளது.

சட்டத்தின்கீழ், நாகேந்திரன் முழுமையான உரிய நடைமுறையை ஏற்றுக்கொண்டார் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் (சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா) பதிலளித்துள்ளார்.

இதனை ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த MFA செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிக்கு கொரோனா: ஓமிக்ரான் பாதிப்பா? – தொடரும் பரிசோதனை

மலேசியன் இன்சைட்டின் தளத்தின் படி, நாகேந்திரனுக்கு கருணை கோரி அதிபர் ஹலிமாவுக்கு மாமன்னர் கடிதம் எழுதியதாக மலேசியாவின் துணை வெளியுறவு அமைச்சர் கமருடின் ஜாஃபர் கடந்த நவம்பர் 23 அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 12 அன்று, பிரதமர் லீ சியென் லூங் மற்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரும் நாகேந்திரன் வழக்கு தொடர்பாக மலேசிய சகாக்களுக்கு பதிலளித்ததாக MFA கூறியது.

இந்திய வம்சாவளி ஆடவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம்!

கடந்த நவம்பர் 9ஆம் தேதி அவருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டபோது, நாகேந்திரனின் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.

அவரது மரண தண்டனைக்கு எதிரான கடைசி முயற்சியாக மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்பாக அவர் சிறிது நேரம் குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கப்பட்டார்.

அவருக்கு நவம்பர் 10-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

மேலும் படிக்கஇந்திய வம்சாவளி ஆடவருக்கு தூக்கு தண்டனை – சிங்கப்பூர் திட்டவட்டம்

வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்த இருவருக்கு “ஓமிக்ரான்” கோவிட்-19 தொற்று – முதற்கட்டப் பரிசோதனை