சிங்கப்பூர் பயணி தவறவிட்ட பணப் பர்ஸை ஒப்படைக்க 200 கி.மீ பயணம் செய்த ஓட்டுநர்..!

Mr Sateesh Karuppusamy cut short his family holiday in Malacca to return the Prada wallet to Mr Carney Mak (Photo: CARNEY MAK)

மலேசிய கிராப் ஓட்டுநர் ஒருவரின் நேர்மை, சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பயணி தனது வண்டியில் விட்டு சென்ற வாலட்டை (பணப் பர்ஸ்) ஒப்படைக்க அவர் சுமார் 200 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார்.

கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஜொகூர் சென்ற திரு கார்னி மேக், இரவு நேரத்தில் கிராப் காரில் பயணம் செய்துள்ளார். இதை அடுத்து அவர் தனது வாலட்டை காரில் தவறவிட்டு சென்றுள்ளார்.

இதையும் படிங்க : உலகின் அதிக “ஆற்றல் மிக்க” பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் இரண்டாம் இடம்..!

இந்நிலையில், 39 வயதான ஓட்டுநர் திரு சதீஷ் கருப்புசாமி, மீண்டும் ஜொகூர் பாருவுக்குச் சென்றார். முதல் நாள் இரவு பயணி கார்னி மேக் தொலைத்த வாலட்டை காரில் அவர் கண்டறிந்தார்.

அதில் சுமார் 250 டாலர் ரொக்கம் இருந்துள்ளது, இதனை அடுத்து அந்த வாலட்டை அதன் சிங்கப்பூர் உரிமையாளர் திரு கார்னி மேக்கிடம் ஒப்படைக்க அவர் பயணித்து சென்றுள்ளார்.

திரு சதீஸ் இந்த வாலட்டை ஒப்படைக்க மலாக்காவில் இருந்து ஜொகூர் பாரு வந்துள்ளார். அதன் பிறகு வாலட்டை பத்திரமாகப் பெற்றுக்கொண்ட மாக், எல்லாம் சரியாக இருந்ததாகக் கூறினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உங்கள் அபிமான திரையரங்குகளில் தர்பார்..!

மேலும், இந்த உயரிய செயலை பாராட்டும் விதமாக கார்னி மேக், கருப்புசாமியுடன் ஒரு செல்ஃபி எடுத்து அதை முழு விவரத்துடன் Johor Bahru Traffic, Crime & Community Service Report என்ற முகநூல் குழுவில் பகிர்ந்துள்ளார்.

கிராப் ஓட்டுநரின் நேர்மையை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.