மலேசிய அமைச்சரின் ஓரின சேர்க்கை ஆபாச காணொளி சர்ச்சை!

மலேசிய அமைச்சரின் ஓரின சேர்க்கை ஆபாச காணொளி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹசீக் அசிஸ் மற்றும் மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலியின் முக அமைப்புடன் கூடிய இந்த காணொளி பல்வேறு செக்ஸ் வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மலாய் மையில் கூறுகையில், ஜூன் 25 ஆம் தேதி இரவு, ஒரு வாட்ஸ்அப் குழு மூலமாக 5 வீடியோ இணைப்புகள் பத்திரிகையாளர்களுக்கு பகிரப்பட்டன.

இந்த வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட இணைப்புகள் PornHub, YouTube மற்றும் You Porn Gay என்ற 3 இணைப்புகள் அடங்கும்.

PornHub இல் ‘ஸ்கேண்டல் அஸ்மின் அலி ஃபுல்’ என்ற தலைப்பில் ஒன்பது நிமிடத்திற்கு மேலாக ஓடக்கூடிய காணொளி உள்ளதாகவும், மேலும் இந்த மாத ஆரம்பத்தில் பகிரப்பட்ட சிறிய அரசியல் ரீதியான செக்ஸ் காணொளியின் முழு பதிப்பாக இது உள்ளதாக கருதப்படுகிறது.

அந்த காணொளியில் உள்ளது நான் தான் என்று ஹசிக் ஒப்புக்கொண்டுள்ளார். மற்றொருவர் அஸ்மின் என்பது சந்தேகத்திற்கு இடமாக இருந்து வருகிறது.

அஸ்மின் எனக்கும் இந்த காணொளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்துள்ளார்.

இதனை அடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட Santubong PKR இளைஞர் அணி தலைவர் ஹசிக் தனது பதவியில் இருந்து தகுதி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.