தனிமைப்படுத்தப்படாமல் நாடு திரும்ப மலேசிய ஊழியர்கள் கோரிக்கை மனு

(PHOTO: Dhany Osman / Yahoo News Singapore)

சிங்கப்பூரில் உள்ள மலேசியர்கள் தனிமைப்படுத்தப்படாமல் வீடு திரும்ப கோரிக்கை மனு செய்துள்ளனர்.

அந்தந்த நாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளை அங்கீகரிப்பதில் அரசாங்கங்கள் செயல்பட வேண்டும் என்று வர்த்தகங்கள் வலியுறுத்தியதால், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தனிமை தேவையை நீக்க வேண்டும் என்று சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

டாக்ஸி ஓட்டுநரின் கைபேசியை பறித்ததாக ஆடவர் கைது

கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி, மலேசியா-சிங்கப்பூர் இடையே எல்லைகளை மூடப்பட்டது, அதன் காரணமாக சிங்கப்பூரில் வசிக்கும் நூறாயிரக்கணக்கான மலேசியர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு நீண்டகாலமாகப் பிரிந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சிங்கப்பூரில் உள்ள மலேசியர்களை தனிமைப்படுத்தப்படாமல் நாடு திரும்ப அனுமதிக்குமாறு கோரிய சமீபத்திய ஆன்லைன் மனு இன்று (ஜூலை 22) காலை 10 மணி நிலவரப்பபடி 9,316 கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இரண்டு வார தனிமை காலத்தை நீக்குவதை மலேசிய அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதே போல, பி.சி.ஆர் சோதனை முடிவுகளை பெறுவதற்காக அந்த தனிமை காலத்தை ஒரு நாள் மட்டும் என அரசாங்கம் மாற்றும் என்றும் அவர்கள் நம்பிக்கை கூறியுள்ளனர்.

தற்போது, ​​மலேசியாவுக்கு சென்று திரும்பி சிங்கப்பூருக்கு வரும் நபர் நியமிக்கப்பட்ட வசதிகளில் 28 நாட்கள் (மலேசியாவில் 14 நாட்கள் மற்றும் சிங்கப்பூரில் 14 நாட்கள்) தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த தனிமைக்கான கட்டணம், மலேசியாவில் சுமார் RM2,200 மற்றும் சிங்கப்பூரில் S$2,200 வெள்ளியும் உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

குளிக்கும்போது வீடியோ எடுத்த பல்கலைக்கழக மாணவருக்கு சிறைத் தண்டனை!