சிங்கப்பூரில் ஏற்பட்ட விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் காயம் – ஒருவர் கைது..!

drivers banned from driving fined PIE

பெடோக் நார்த் (Bedok North) சாலையில் நேற்று இரவு (மே 26) மூன்று கார்கள் மற்றும் ஒரு லாரி சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 34 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அடுத்த இந்திய தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க இருக்கும் தமிழர்..!

டம்பைன்ஸ் அவென்யூ 10 நோக்கிய, பெடோக் நார்த் சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து இரவு 8.53 மணியளவில் தகவல் கிடைத்தாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் இரண்டு வயது சிறுமி, கே.கே மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் நான்கு பேர், அதாவது 31, 55 மற்றும் 69 வயதுடைய மூன்று ஆண் ஓட்டுநர்களும், 31 வயதான ஒரு பெண் பயணியும் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவு அடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்த காணொளி, Singapore roads accident.com என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Accident along PIE Bedok North,on 26/05/20 at about 9pm.

Suspected drug offender who caused four-vehicle crash arrestedFootageAccident along Bedok North,on 26/05/20 at about9pm.4 injured and one young child were taken to hospital .Instagram https://www.instagram.com/p/CAtzwEHp1HJ/?igshid=z2gngeg4tu91Twitter 查看 Singapore Roads Accident. Com (@RoadsCom): https://twitter.com/RoadsCom?s=09Follow Singapore roads accident. Com on Telegram: https://t.me/SGroad_accident

Posted by Singapore roads accident.com新加坡公路意外网页 on Tuesday, May 26, 2020

மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 32,000ஐ தாண்டியது..!