விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை செய்த நபர் – குற்றவாளி என நிரூபணம்!

Man convicted of molesting Scoot air stewardess on flight

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் விமானப் பணிப்பெண்ணை பாலியல் தொல்லை செய்த 39 வயது நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரை பூர்விகமாக கொண்ட விஜயன் மதன் கோபால், சிங்கப்பூர் கட்டுப்பாட்டில் உள்ள விமானத்தில் இந்தியாவின் கொச்சினிலிருந்து சிங்கப்பூர் நோக்கி நவம்பர் 2, 2017 அன்று பயணம் செய்தார்.

22 வயதான விமானப் பணிப்பெண்ணின் வலது கையைப் பிடித்து, முகத்தைத் தொட்டு, பிறகு அப்பெண்ணின் தொடையில் கையை வைத்ததாகவும், மேலும், அப்பெண்ணின் பின்புறத்தை தொட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட விஜயன் ( வலது பக்கம்)

அவர்தான் கடைசி ஆளாக விமானத்தில் ஏறியதாகவும், மேலும் அவரின் மீது ஆல்கஹால் (alcohol) வாடை வீசியதாகவும் மற்றும் அவரது பேன்ட் அவிழ்த்திருந்ததாகவும் பாதிக்கப்பட்ட அப்பெண் தெரிவித்தார்.

விமானம் புறப்பட்ட உடனேயே, விஜயன் தனது இருக்கையில் அமர்ந்த பிறகு மற்றொரு விமானப் பணிப்பெண்ணுடன் தகராறு செய்வதை பாதிக்கப்பட்ட பெண் கவனித்து உள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் விஜயனுக்கு ஒரு பணிப்பெண்ணை நியமித்தார். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒரு பயணிக்கு மருத்துவ உதவி செய்து கொண்டிருந்தார்.

இது நடந்து கொண்டிருக்கையில், விஜயன் பலமுறை கால் லைட் பொத்தானை (call light button) அழுத்தி உதவி கேட்டு பாதிக்கப்பட்டவர் பணிபுரிய விரும்பியுள்ளார்.

நோய்வாய்ப்பட்ட பயணிகளுக்கு உதவ ஒரு செவிலியர் வந்த பிறகு, பாதிக்கப்பட்ட பெண் விஜயனிடம் சென்று கால் லைட்டை மீண்டும் மீண்டும் அழுத்த வேண்டாம், என்று கூறினார்.

திடீரென்று விஜயன் அவள் எங்கே வசிக்கிறாள்? என்று கேட்டு, அவள் முகம், கன்னம், நெற்றியை தொட்டு, நீ மிகவும் அழகாக இருக்கிறாய்! என்று எல்லை மீறியுள்ளார்.

விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர் கூறியதாவது, இது தன்னை கோபமாகவும், சங்கடமாகவும், மிகவும் வெறுப்பாகவும் உணர வைத்தது. ஆனால் அவர் ஒரு பயணி என்பதால் என்னால் அவரை தள்ளி விடமுடியவில்லை, என்று கூறினார்.

பாதிக்கப்பட்டவர் எழுந்து நிற்க முயன்றார், ஆனால் விஜயன் தொடர்ந்து அவளின் வலது கையைப் பிடித்துள்ளார். அவள் மீண்டும் முயன்றபோது, விஜயன் அவளின் வலது தொடையில் கையை மிகுந்த பலத்துடன் வைத்துள்ளார்.

ஒருவழியாக எழுந்து நிற்க முயன்றபோது விஜயன் அந்த பெண்ணின் பின்புற பகுதியின் மீது கைவைத்ததை உணர்ந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் இச்சம்பவத்தை பற்றி கேப்டனிடம் புகார் தெரிவித்தார். பின்னர் நவம்பர் 2, 2017 அன்று காலை 8 மணியளவில் விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னர், பாதிக்கப்பட்டவர் ஸ்கூட் மற்றும் விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.

விஜயன் தான் எந்த குற்றமும் செய்யவில்லை, என்று மறுத்துவிட்டார். மேலும் அவர் அந்த பெண்ணின் மீதே மோசமான சேவை செய்தார் என்று புகார் கூறியுள்ளார்.

மாவட்ட நீதிபதி சலினா இஷாக் (Salina Ishak) விமான பணிப்பெண்ணின் மீது கிரிமினல் சக்தியைப் பயன்படுத்திய மூன்று குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி எனக் கண்டறிந்தார். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவர் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து பெறும் வாய்ப்புள்ளது.