சிங்கப்பூரில் புதிதாக நோய்த்தொற்று பாதித்தவர்களில் ஒருவர் உயிரிழப்பு..!

worker need life support employer urgently looking for his next of kin
(Google Maps)

சிங்கப்பூரில் புதிதாக நோய்த்தொற்று பாதித்தவர்களில் ஒருவர் இதயக் கோளாறு காரணமாக உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

சம்பவம் 45227 என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், 69 வயதான சிங்கப்பூரர். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உயிரிழந்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 90,000 வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கு திரும்பியுள்ளனர்..!

அவர் வீட்டில் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும், மேலும் செங்காங் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, அதே நாளில் அவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், ஹைப்பர்லிபிடீமியா, ஹைப்போ தைராய்டிசம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்றவை இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அடுத்த 12 மாதங்களுக்கு அதிகமானோர் வேலை இழக்க நேரிடலாம் – சான் சுன் சிங்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg