லிப்ட் கதவுகளைத் திறந்து வைக்காததால் பெண்ணைத் தாக்கிய ஆடவருக்கு அபராதம்..!

(Rep. Image)

சிங்கப்பூரில் பெண் ஒருவர் லிப்ட் கதவுகளைத் திறந்து வைக்காத காரணத்தால், ​​51 வயதான ஆடவர் ஒருவர் தனது நடை குச்சியைக் கொண்டு, அவருடன் கோபத்தில் வாதிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த குற்றச்செயலுக்காக, இன்று செவ்வாயன்று (அக். 27) சியோ சாய் சின் என்ற அந்த ஆடவருக்கு S$3,750 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மூன்றாவது குற்றச்சாட்டு கவனத்தில் கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த புதிய இடங்கள்..!

அந்த நேரத்தில் சியோ வேலையில்லாமல் இருந்ததாகவும், அவரது மருத்துவ நிலை காரணமாக நடை குச்சியைப் பயன்படுத்தினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்கவாதம் காரணமாக கடந்த ஜூன் 2015 முதல் ஆகஸ்ட் 2016 வரை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாகவும், சம்பவத்தின் போது ஹெமிபிலீஜியா என்னும் உடலின் ஒரு பக்கத்தில் பாதிப்பு காரணமாக அவர் அவதிப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஜனவரி 27ஆம் தேதி இரவு 7 மணியளவில், பாதிக்கப்பட்ட 49 வயதான பெண், சோவா சூ காங்கில் உள்ள வீட்டுவசதி வாரியத் தொகுதியில் லிப்ட்டுக்குள் நுழைந்தவுடன் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்தியதற்காக, சியோ இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம், S$5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கிரிமினல் யுக்தியை பயன்படுத்தியதற்காக, அவர் மூன்று மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம், S$1,500 வரை அபராதம் விதிக்கப்படலாம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கலவரம் செய்ததாக 6 ஆண்கள், 6 பெண்கள் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…