“உல்லாசம் அனுபவிக்க காசு” – கவர்ச்சி படங்களை அனுப்பி ஆண்களை ஏமாற்றிய நபருக்கு அபராதம்

tada-driver-fined-racist-remarks-passenger

சிங்கப்பூரில் இளம் பெண் போன்று வேடம்போட்டு இரு ஆண்களை ஏமாற்றிய நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது அவர்களிடம் பாலியல் ஆசை காட்டி பணம் பறிக்க இந்த ஏமாற்று வேலையை செய்த அவருக்கு S$2,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

கெலாங் பகுதியில் ஆயுதம்கொண்டு தாக்குதல்: 26 வயது நபர் கைது

கென்ட் லிம் என்ற 24 வயது இளைஞரான அவர் டீன் ஏஜ் பெண் போன்று போஸ் கொடுத்து, ஆன்லைனில் சந்தித்த ஆண்களுக்கு உடலுறவு ஆசை காட்டி பணம் பறித்துள்ளார்.

பணம் பெற்றுக்கொண்டவுடன் அவர்களுடனான தொடர்பை துண்டித்து எஸ்கேப் ஆகிவிடுவார் இந்த கில்லாடி ஆடவர்.

மொபைல் டேட்டிங் செயலி மூலம் இளைஞர்களைச் சந்தித்த லிம், ஆன்லைனில் கிடைத்த கவர்ச்சிகரமான பெண்களின் புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பியும் ஏமாற்றியுள்ளார்.

இந்நிலையில் அவர்களை ஏமாற்றிய இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு லிம்முக்கு S$2,000 அபராதம் விதிக்கப்பட்டது.