சிங்கப்பூரில் 18 பேர் ஒன்றுகூடிய சம்பவம் – துணை ஏற்பாடு செய்தவருக்கு அபராதம்..!

PHOTO: Today

சிங்கப்பூரில் அதிரடித் திட்டம் நடப்பில் இருந்த காலகட்டத்தில், 18 நபர்கள் ஒன்றுகூடும் நிகழ்வுக்கு துணை ஏற்பாடு செய்த லியோங் சீ மன் (Leong Chee Mun) என்ற ஆடவருக்கு S$5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 8ஆம் தேதி நடந்த இந்த நிகழ்வில், தனது பிளாட்டுக்குள் நுழைய அனுமதித்த, 32 வயதான காஸ்ஸி ஓங் ஷி ஹாங் (Cassie Ong Shi Hong) என்ற பெண்ணுக்கு இந்த குற்றச்சாட்டின் கீழ் முன்னர் S$4,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பாதுகாப்பு அதிகாரியின் மீது வேண்டுமென்றே தும்மிய வெளிநாட்டவருக்கு சிறை..!

காம்பஸ்வேல் கிரசண்ட் பிளாட்டில் வெவ்வேறு வசிப்பிடங்களைச் சேர்ந்த 16 பேர் ஒன்றுகூடிய இந்த குற்றச்சாட்டு கவனத்தில் கொள்ளப்பட்டது.

அவர்கள் இரவு உணவு, மதுபானம் அருந்துவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது நெருங்கிய தொடர்பில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தெம்பனீஸ், பொங்க்கோல், ஹாவுகாங் மற்றும் புக்கிட் பஞ்சாங் போன்ற இடங்களிலிருந்து மொத்தம் 16 பேர் கடந்த மே 8ஆம் தேதி அந்த பிளாட்டுக்கு வந்ததாகவும், கடைசி நபர் மே 9 அன்று அதிகாலை 1.15 மணிக்கு வந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு வந்த விருந்தினர்களுக்கு, கடந்த மாத தொடக்கத்தில் S$2,500 முதல் S$3,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

COVID-19 ஒழுங்குமுறையை மீறியதற்காக, அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறை, S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கடந்த இரண்டு மாதங்களில் ஆறு பேருந்துகள் பறிமுதல் – LTA

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…