தடுப்பூசி போட்டுவிட்டதாக போலி சான்றிதழ் அளித்த வெளிநாட்டவர் மீது குற்றச்சாட்டு

உணவு மற்றும் பானக் கடையில் மோசடியாக உணவருந்தும் பொருட்டு, போலியான தடுப்பூசி சான்றிதழை அளித்த ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தடுப்பூசி குறித்து போலியான மருத்துவர் குறிப்பை தயாரித்ததாக 30 வயதான அந்த ஆடவர் மீது இன்று (செப்டம்பர் 15) குற்றம் சாட்டப்பட்டது.

சிங்கப்பூரில் தீவு முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி!

ஜாங் ஷாவோபெங் (Zhang Shaopeng) என்ற அந்த சீன நாட்டவர் மீது, இந்த போலி ஆவணம் தொடர்பாக நான்கு ஆண்டுகள் அதிகபட்ச சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட சட்டத்தில் இடம் உண்டு.

உணவகத்திற்குள் செல்ல போலியான தடுப்பூசி சான்றுகளைப் பயன்படுத்தியதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதலாம் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் செப்டம்பர் 1ஆம் தேதி ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

காவல்துறை விசாரணையைத் தொடர்ந்து ஜாங் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு பொது இடங்களில் மக்கள் கூட்டம்